News October 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 7, புரட்டாசி 21 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
Similar News
News October 7, 2025
மிதாலி ராஜை கெளரவிக்கும் ஆந்திர அரசு

மகளிர் கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனை படைத்த மிதாலி ராஜை ஆந்திர அரசு கெளரவிக்க முடிவெடுத்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு ஸ்டாண்டுக்கு மிதாலி ராஜ், உள்ளூர் வீராங்கனை ரவி கல்பனா ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படவுள்ளன. விசாகப்பட்டினத்தில் IND W Vs AUS W உலக கோப்பை போட்டி நடைபெறும் அக்.12-ம் தேதி அன்று, அவர்களது பெயர்களில் இரு ஸ்டாண்ட்களும் திறக்கப்படவுள்ளன.
News October 7, 2025
சே குவேரா பொன்மொழிகள்

▶புரட்சி என்பது பழுத்தவுடன் விழும் ஆப்பிள் பழம் அல்ல, நீங்கள்தான் அதை விழ வைக்க வேண்டும். ▶அதிகமாக சாதிப்பதற்கு, முதலில் நீங்கள் அனைத்தையும் இழக்க வேண்டும். ▶சொல்லின் சிறந்த வடிவம் செயல். செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை. ▶சதுரங்கம் என்பது மனித மூளைக்கு கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் ஒரு ஆற்றல்வாய்ந்த வழியாகும். ▶விதைத்துக் கொண்டே இரு. முளைத்தால், மரம். இல்லையெனில், உரம்.
News October 7, 2025
விஜய் ரசிகர்களுக்கு பொண்ணு கொடுக்காதீங்க: வீரலட்சுமி

கரூர் துயரத்திற்கு விஜய் ரசிகர்களே காரணம் என்று தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி குற்றஞ்சாட்டியுள்ளார். கரூர் துயரத்திற்கு தண்டனை வழங்கும் வகையில் தமிழக மக்கள் விஜய் ரசிகர்களுக்கு பெண் கொடுக்க மற்றும் வீட்டில் பெண் எடுக்க கூடாது, யாரும் அவர்களை காதலிக்காதீர்கள் என்றும் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். விஜய்யை போல அவரது ரசிகர்களும் தவறான செயல்களிலேயே ஈடுபடக் கூடியவர்கள் என்று அவர் சாடியுள்ளார்.