News September 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 29, புரட்டாசி 13 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: அதிதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

Similar News

News September 29, 2025

மத்திய கிழக்கில் மகத்தான வாய்ப்பு: டிரம்ப்

image

மத்திய கிழக்கில் சிறப்பான ஒன்றை அடைய ஒரு உண்மையான வாய்ப்பு உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சமீபத்தில் ஐநாவில் அவர் பேசியிருந்தார். இந்நிலையில், ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து நாடுகளும் ஒரு சிறப்பான முடிவை எதிர்நோக்குவதாகவும், அதை தாங்கள் (USA) முடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News September 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வலியறிதல் ▶குறள் எண்: 473 ▶குறள்: உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். ▶பொருள்: தம்முடைய வலிமையின் அளவை அறியாமல் உணர்ச்சி வயப்பட்டு ஒரு செயலைத் தொடங்கி இடையில் கெட்டுப் போனவர்கள் பலர் உண்டு.

News September 29, 2025

ஆசிய கோப்பை டிராபியை வாங்க இந்தியா மறுப்பு

image

9-வது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கோப்பை மற்றும் பதக்கங்களை பாக்., முன்னாள் அமைச்சரும், ACC தலைவருமான மொஷின் நாக்வியிடம் இருந்து பெற இந்தியா மறுத்துள்ளது. அதற்கு பதிலாக, எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கோப்பையை பெற இந்தியா விரும்புகிறதாம். இருப்பினும், ஆட்டநாயகன் விருதுகள் வழங்கப்பட்டுவிட்டன.

error: Content is protected !!