News September 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 25, புரட்டாசி 9 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை9:00 AM – 10:30 AM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை
Similar News
News September 25, 2025
நினைவுகளின் விசித்திர அனுபவம்

நினைவுகள் எப்போதும் சிறப்பானவை தான். கடந்த காலத்தில் நாம் அழுத கணங்களை நினைவுகூர்ந்து, அட இதற்கா நாம் அவ்வளவு கவலைப்பட்டோம் என்று சில சமயங்களில் நாம் சிரிக்கிறோம். அதேநேரம் நாம் சிரித்து மகிழ்ந்த காலங்களை நினைத்து, மீண்டும் அந்த காலம் வாராதா என்று ஏங்கி அழவும் செய்கிறோம். இது தானே வாழ்க்கை!
News September 25, 2025
உசைன் போல்ட்டின் பொன்மொழிகள்

⁎பந்தயத்தின் தொடக்கத்தைப் பற்றி சிந்திக்காதீர்கள், முடிவைப் பற்றிச் சிந்தியுங்கள். ⁎மற்றவர்களின் விருப்பத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. எனது கருத்தே இறுதியானது. ⁎நான் என்ன செய்தாலும் அதில் மட்டுமே என் முழு கவனமும் இருக்கும். ⁎உங்களுக்கு என்று ஒரு வரம்பை நீங்களே அமைக்க வேண்டும். ⁎உங்கள் ஆளுமை வெளிப்படும் போது தான் உங்களை யார் என்று அனைவரும் புரிந்து கொள்வார்கள்.
News September 25, 2025
லோகோவை மாற்றிய சுசுகி

22 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்டோமொபைல் நிறுவனமான சுசுகி தனது பிராண்ட் லோகோவை மாற்றியுள்ளது. 1958 முதல் பயன்பாட்டில் உள்ள S-வடிவ லோகோ முதன்முதலில் 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது புதிதாக ஷார்ப்பான வடிவத்தில் இருந்து பிளாட்டாக ‘S’ லோகோ மாற்றப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் ஸ்லோகனும் ‘உங்களின் பக்கம்’ என மாற்றப்பட்டுள்ளது.