News September 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 23, புரட்டாசி 7 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
Similar News
News September 23, 2025
கருண் நாயருக்கு பதில் தேவ்தத் படிக்கல்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் அணியை, BCCI நாளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இங்கிலாந்து தொடரில் சொதப்பிய கருண் நாயர் நீக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் மீண்டும் தேவ்தத் படிக்கல் இடம் பிடிப்பார் என தெரிகிறது. காயம் காரணமாக ரிஷப் பண்ட் விலகியுள்ளதால் துருவ் ஜூரேல் லெவனில் இடம் பிடிப்பார். மற்றொரு விக்கெட் கீப்பராக ஜெகதீஸ்சன் இணைய, வேறு மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை.
News September 23, 2025
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது பிரான்ஸ்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை தனி நாடாக, <<17788776>>பல்வேறு நாடுகள்<<>> அங்கீகரித்து வருகின்றன. அந்த வரிசையில் இப்போது பிரான்ஸும் இணைந்துள்ளது. ஐநா பொதுச்சபையில் இதை அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News September 23, 2025
பகத் சிங் பொன்மொழிகள்

*தியாகம் என்பது ஒருபோதும் வீணாகாது
*அமைதி என்பது பலவீனத்தைக் குறிப்பதல்ல. அது வலிமையின் வெளிப்பாடு.
*உழைப்பின் மூலமாகவே ஒரு புதிய சமூகத்தை உருவாக்க முடியும்.
*ஒற்றைக் குறிக்கோள் கொண்ட மக்கள், உலகை மாற்றியமைப்பார்கள்.
*ஒரு நபர் கொல்லப்படலாம், ஆனால் அவரது சிந்தனைகளை ஒருபோதும் கொல்ல முடியாது.