News August 31, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 31, ஆவணி 15 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்:7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM &
1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை
Similar News
News August 31, 2025
MP மஹுவா மொய்த்ரா மீது FIR பதிவு

அமித்ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்த TMC MP மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் போலீசார் FIR பதிவு செய்துள்ளனர். வங்கதேச ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய அமித்ஷாவின் தலையை வெட்ட வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், பல பாஜக தலைவர்கள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால், அவரது பேச்சு தவறாக திரித்து பரபரப்படுவதாக TMC விளக்கம் அளித்தது.
News August 31, 2025
உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை கோடம்பாக்கம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்றுவந்த, மறைந்த திமுக மூத்த தலைவர் <<17572807>>வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி<<>> காலமானார். ஹாஸ்பிடலுக்கு விரைந்த DCM உதயநிதி ஸ்டாலின், அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனிடையே, வெளிநாட்டில் இருக்கும் CM ஸ்டாலின், வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியுள்ளார். குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
News August 31, 2025
Gmail யூஸ் பண்றீங்களா? உடனே இதை மாத்துங்க!

Gmail பாஸ்வேர்டை உடனடியாக மாற்றச் சொல்லி உலகம் முழுவதும் 250 கோடி பேருக்கு கூகுள் செய்தி அனுப்பியுள்ளது. ShinyHunters எனும் ஹேக்கர்ஸ் குழு, பல கோடி பேரின் இ-மெயில் கணக்கை ஹேக் செய்து அந்தரங்க தகவல்களை திருடியுள்ளதாகவும், எனவே உடனே பாஸ்வேர்டை மாற்றி, Two-step verification-ஐ ஆன் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது. பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டாலும், Two-step verification உங்களது கணக்கை பாதுகாக்கும்.