News August 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ஆகஸ்ட் 29, ஆவணி 13 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை

Similar News

News August 29, 2025

மீண்டும் செங்கலை மேற்கோள்காட்டிய உதயநிதி

image

பொதுப்பணித் துறைக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், தான் நடித்த முதல் படம் ஒரு ‘கல்’ ஒரு கண்ணாடி என்றும், 2021 பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் நான் பயன்படுத்தியது ஒரேயொரு செங்கல் தான் எனவும் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது நிறைவுபெறும் என்ற கேள்விக்காக செங்கலை உதயநிதி பயன்படுத்தியது கவனம் பெற்றிருந்தது.

News August 29, 2025

இப்போது தேர்தல் நடந்தால்… இந்தியா டுடே கருத்துக்கணிப்பு

image

2024 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால், நிதிஷ், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவால் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கைப்பற்றியது. ஆனால், தற்போது தேர்தல் நடந்தால், பாஜக + 324, காங்., + 208 இடங்களில் வெற்றிபெறும் என்று இந்தியா டுடே – சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

News August 29, 2025

சளித் தொல்லையை விரட்டும் கற்பூரவள்ளி தேநீர்!

image

மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சிரைப்பு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கற்பூரவள்ளி தேநீரைப் பருகலாம் என ஆயுர்வேத மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கைப்பிடி கற்பூரவள்ளி இலை, சுக்கு, மிளகு, துளசி, மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நீரில் கொதிக்க வைக்கவும். வடிகட்டிய பிறகு, அதில் பனங்கற்கண்டு சேர்த்தால் கற்பூரவள்ளி தேநீர் ரெடி. இதை எப்போது வேண்டுமென்றாலும் பருகலாம். SHARE IT.

error: Content is protected !!