News August 25, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 25, ஆவணி 26 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
Similar News
News August 25, 2025
திமுகவை ஆதரிக்க வேண்டிய தேவை உள்ளது: அமீர்

ஆணவ கொலைக்கு எதிரான சட்டத்தை திமுக கொண்டுவர வேண்டும் என இயக்குநர் அமீர் வலியுறுத்தினார். மேலும், திமுகவை எதிர்த்துதான் பொதுவாழ்க்கைக்கு வந்ததாக குறிப்பிட்ட அமீர், இன்றைய காலகட்டத்தில் திமுகவை ஆதரிக்க வேண்டிய நிலை உள்ளதாக கூறியுள்ளார். சனாதனத்தை எதிர்த்து போராட வேண்டிய தேவை உள்ளதால் திமுக தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
News August 25, 2025
ஆம்னி பஸ் கட்டண உயர்வால் பயணிகள் அவதி

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். 27-ம் தேதி ஒருநாள் விடுமுறையாக இருந்தாலும், மேலும் 2 நாள் விடுப்பு எடுத்து சொந்த ஊர்களுக்கு பயணிக்க பலர் தயாராகிவிட்டனர். இதைப் பயன்படுத்தி சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களில், 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
News August 25, 2025
வரலாற்றில் இன்று

1952 – நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் பிறந்தநாள்
1994 – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிறந்தநாள்
1998 – தனுஷ்கோடி அருகே அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 45 பேர் பலி
2012 – நிலவில் முதன்முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்