News August 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 23 – ஆவணி 7 ▶ கிழமை: சனிக்கிழமை ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶ எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶ குளிகை: 6:00 AM – 7:30 AM ▶ திதி: பிரதமை ▶ சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
Similar News
News March 14, 2026
தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி

லயோலா(IPDS) கருத்துக்கணிப்பில், திமுகவை விட தவெகவுக்கு அதிக வாக்குவங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் தவெகவுக்கு 19.20%, திமுகவுக்கு 17.7%, அதிமுகவுக்கு 15.32%, NTK-வுக்கு 6.7% வாக்குவங்கி உள்ளதாம். தேர்தல் நடந்தால் திமுக கூட்டணியில் இருந்து 12%, NDA-வில் இருந்து 8%, NTK-ல் இருந்து 2.5% வாக்குகளை பிரித்து தவெக 22.5% வாக்குகளை பெறுமாம். இது 2 பிரதான அணிகளுக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
News March 14, 2026
கேஸ் சிலிண்டர்.. பயப்பட வேண்டாம் மக்களே!

தட்டுப்பாடு அச்சம் காரணமாக, நேற்று ஒரேநாளில் 88 லட்சம் பேர் சிலிண்டர் புக் செய்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கேஸ் சிலிண்டர் குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும், தேவையான அளவு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கள்ளச் சந்தையில் சிலிண்டர் விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதாம். அதனால் கவலையை விடுங்க!
News March 14, 2026
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்: ஈரான்

இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ஈரான் தூதர் தெரிவித்துள்ளார். எத்தனை கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பதை இப்போது சொல்ல முடியாது என்ற அவர், இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டார். மேலும், இந்தியா – ஈரான் நாடுகளிடையேயான உறவு ஆழமாக இருப்பதாகவும், தற்போது இருநாடுகளும் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து வருவதாகவும் தெரிவித்தார்.


