News April 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 07 ▶பங்குனி – 21 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை: 07:30 AM – 09:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: பூராடம் ▶நட்சத்திரம்: பூசம் 11.18
Similar News
News April 9, 2025
அன்னை இல்லத்தில் எனக்கு உரிமை இல்லை: ராம்குமார்

₹9 கோடி கடனுக்காக நடிகர் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு நீதிமன்றத்தை நாடினார். இதனிடையே அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என பிரபுவின் அண்ணன் ராம் குமார் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
News April 9, 2025
“அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை”

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அளித்த <<16029786>>தீர்ப்பை <<>>வரவேற்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகவும் X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கேரளாவிலும் தமிழகத்தை போல ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
News April 9, 2025
22-ல் ஜாக்டோ-ஜியோ பேரணி.. செவி சாய்க்குமா அரசு?

ஏப்ரல் 22-ம் தேதி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் ஜாக்டோ-ஜியோ பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் ஜாக்டோ-ஜியோ வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.