News April 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் – 05 ▶பங்குனி – 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அஷ்டமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அனுஷம் ▶நட்சத்திரம்: திருவாதிரை கா 10.47
Similar News
News October 9, 2025
விஜய்யின் தலைமை பண்பு: HC கருத்தை நீக்க கோரிக்கை

கரூர் துயரம் தொடர்பாக அமைக்கப்பட்ட SIT விசாரணைக்கு தடை கோரி தவெக தரப்பில் SC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், 41 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோத சக்திகளின் செயல்பாடுகளே காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விஜய்யின் தலைமை பண்பு குறித்த HC-ன் கருத்தை நீக்க கோரியுள்ள தவெக, கூட்ட நெரிசலில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக HC கூறியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
News October 9, 2025
18 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழை பொழியும்

தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், மதுரை, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?
News October 9, 2025
இந்தியாவின் வியட்நாம் ‘தமிழகம்’

தமிழகம், இந்தியாவின் வியட்நாமாக உள்ளது என சர்வதேச பொருளாதார கொள்கைக்கான கொரிய நிறுவன தலைவர் (இந்தியா – தெற்காசிய) கியூங்குன் கிம் தெரிவித்துள்ளார். தமிழகம், வியட்நாமின் உற்பத்தி துறையின் பங்களிப்பு என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அளவில் இரண்டுமே வேகமாக வளர்ந்து வரும் தொழில் கேந்திரங்கள் என்றும் கூறியுள்ளார்.