News March 29, 2025
இன்றைய நல்ல நேரம்

▶மார்ச் – 29 ▶பங்குனி – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மகம் ▶நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 8.15
Similar News
News March 31, 2025
கால்ஷீட் தரவில்லை… தனுஷ் மீது பரபரப்பு புகார்

தனுஷ் 6 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணம் பெற்றுக் கொண்டு தற்போதுவரை கால்ஷீட் தரவில்லை என ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் புகாரளித்துள்ளது. இதுகுறித்து ஆர்.கே.செல்வமணிக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரத்தில் 2024 அக்டோபர் 30-ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என ஏற்கனவே கூறியது என்னானது என கேள்வி எழுப்பியுள்ளது. அரசியல் குறுக்கீட்டால் நியாயம் கிடைக்கவில்லை என்றும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
News March 31, 2025
கோடை மழை வெளுக்கப் போகுது

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியிருக்கும் அவர்கள், இதனால் வெப்பம் சற்று தணியும் என்றும் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, ஏப்ரல் – மே மாதங்களில் பெய்யும் கோடை மழையை விட இந்தாண்டு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 31, 2025
மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. நாளை முதல் IT இல்லை

புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்துக்கும் மேல் சம்பளம் ஈட்டுவோர் IT செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம், அதாவது மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.