News February 13, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶ பிப்ரவரி 13 ▶ மாசி- 1 ▶கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 11:00 AM – 12:00 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:00 AM – 01:00 AM, 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM ▶குளிகை: 09:00 AM – 10:30 AM ▶திதி: பிரதமை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: மகம் ▶சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்.

Similar News

News February 13, 2025

உச்சத்தில் தங்க இடிஎஃப் முதலீடு

image

கடந்த மாதத்தில் தங்க ETF திட்டங்களில், வரலாறு காணாத அளவுக்கு முதலீடு பெறப்பட்டுள்ளதாக இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரேமாதத்தில் தங்க ETFல் ₹3,751 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வதை விட, ETF திட்டங்கள் வாயிலாக தங்கத்தை யூனிட்களாக டிஜிட்டல் வடிவில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது.

News February 13, 2025

கழுத்தை நெரித்தவர் பிரசாந்த்: விசிக சாடல்

image

பிஹார் தேர்தலில் பல தொகுதிகளில் டெபாசிட் கூட வாங்க முடியாதவர் தான் பிரசாந்த் கிஷோர் என விசிக கடுமையாக சாடியுள்ளது. தேர்தல் வியூகம் என்பது மக்களை ஏமாற்றும் வழி எனவும், வேலையில்லா இளைஞர்களை வைத்துக் கொண்டு கட்சிகளிடம் பணம் பறிக்கும் செயல் என்றும் விமர்சித்துள்ளது. மேலும், திமுக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 6 சீட் மேல் கொடுக்க கூடாது என கழுத்தை நெரித்தவர்தான் கிஷோர் என்றும் சாடியுள்ளது.

News February 13, 2025

பள்ளிகளில் 49 பேர் பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு

image

மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக தினமும் செய்திகள் வெளியாகின்றன. இந்நிலையில், கடந்த 100 நாட்களில் மட்டும் சென்னை, தி.மலை, தஞ்சை உள்ளிட்ட 21 மாவட்டங்களில், சுமார் 63 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் 49 பேர் எனத் தெரியவந்துள்ளது. இதற்கு எதிராக அதிமுக வரும் 18ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.

error: Content is protected !!