News March 14, 2025
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவோருக்கு குட்நியூஸ்!

இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் ஏறுவது என்பது, இப்போது வரை மிகப்பெரிய சாதனையாகவே கருதப்பட்டு வருகிறது. எனினும், எவரெஸ்ட் ஏறும் வீரர், வீராங்கனைகளுக்கு சொல்லும்படியான பரிசுத்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், இந்தக் குறையை தீர்க்கும் வகையில், எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 29, 2025
ChatGPT-ஐ விட ஸ்மார்ட்டான AI Tools.. Try பண்ணுங்க

ChatGPT-ஐ விட ஸ்மார்ட்டான பல AI Tools இருக்கிறது. 1.CHAT PDF- கடினமாக இருக்கும் PDF-ஐ இதில் அப்லோடு செய்தால், இந்த AI-யே அதனை விளக்கும். 2.Dectopus – உங்களுக்கு தேவையான PPT Presentation-ஐ இந்த AI உருவாக்கி கொடுக்கும். 3.Jenni AI – பெரிய பெரிய கட்டுரைகளை எழுதும் போது, அடுத்து என்ன எழுத வேண்டும் என்ற தடுமாறுகிறீர்களா? இந்த AI நீங்கள் என்ன எழுத வேண்டும் என்பதை சொல்லும். SHARE.
News August 29, 2025
AI-ல் கால் பதிக்கும் ஜியோ..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ‘எங்கும் AI.. அனைவருக்கும் AI’ என்ற இலக்கை நோக்கி பயணம் செய்ய உள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார். இதற்காக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், உலகத்தரத்திலான AI-ஐ இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று அனைவருக்கும் வழங்குவதே தங்களது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 2026 முதல் பாதிக்குள் ஜியோ IPO வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 29, 2025
அரசுப் பள்ளி to அமெரிக்கா… தமிழகத்திற்கு பெருமிதம்

பண்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவி அமெரிக்கா சென்றுள்ளார். இது பற்றி X தளத்தில் பதிவிட்டுள்ள அன்பில் மகேஸ், ஈரோடு மாணவி தட்சண்யா, 11-ஆம் வகுப்பை, Belton-ல் உள்ள Heartland பள்ளியில் படித்து வருவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து 12ஆம் வகுப்பை படிக்க அவர் தமிழகம் திரும்புவார் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கான நிதியை அமெரிக்க வெளியுறவு துறை வழங்குகிறது.