News October 22, 2025

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்; 7,267 காலி பணியிடங்கள்

image

மத்திய அரசு பள்ளிகளில் (EMRS) உள்ள 7,267 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed முடித்த 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ₹18,000- ₹1,12,400 வரையும், ஆசிரியர்களுக்கு ₹35,400 – ₹2,09,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். நாளையே கடைசி நாள். SHARE.

Similar News

News October 22, 2025

66 வயதில் 10-வது குழந்தை: ஹெல்த் சீக்ரெட் என்ன?

image

ஒரு குழந்தைக்கே இன்றைய இளம் தம்பதியர் IVF உதவியை நாடுகின்றனர். ஆனால் ஜெர்மனியின் 66 வயது அலெக்சாண்டா, 10-வது குழந்தையை பெற்றெடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். 50 வயதுக்கு பின் இது அவரது 8-வது குழந்தையாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே, தான் கர்ப்பத்தை தாங்க காரணம் என்று கூறும் அவர் சரிவிகித உணவுடன் தினசரி நீச்சல், 2 hr நடை பயிற்சி செய்கிறார். மனதை மகிழ்ச்சியாக வைத்தாலே எல்லாமே சாத்தியம் என்கிறார்.

News October 22, 2025

BREAKING: இன்றும் ரெட் அலர்ட்.. கனமழை பொளந்து கட்டும்

image

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(அக்.23) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்.28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 22, 2025

வசூல் வரிசையில் இடம்பெற்றது ’பைசன்’

image

தீபாவளி ரேஸில் வெளியான ‘டியூட்’ படம் அதிக வசூலை ஈட்டியிருந்தாலும், அதைவிட ’பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் கபடி வீரர் கேரக்டரில் துருவ் விக்ரமும் சிறப்பாக நடித்திருப்பதாக கூறுகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியாகி 5வது நாளில் சுமார் ₹22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீங்கள் பைசன் படம் பார்த்துட்டீங்களா?

error: Content is protected !!