News March 17, 2024
SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

SBI தனது வாடிக்கையாளர்களுக்கு Savings Plus என்ற புதிய கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் வங்கி தானாகவே அதனை Fixed Depoistக்கு மாற்றிவிடும். அதன்மூலம் அதிக வட்டி கிடைக்கும்.
Similar News
News September 4, 2025
‘சிட்டிசன்’ படம் கமல் பண்ண வேண்டியதா?

அஜித் திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம் ‘சிட்டிசன்’. அத்திப்பட்டியையும், அவரின் கெட்டப்புகளையும் அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியமான அந்த படம் முதலில் கமல் பண்ணுவதாக இருந்ததாம். இதனை முன்னர் ஒரு பேட்டியில் அதன் இயக்குநரே சொல்லியிருப்பார். கமலுக்கு கதை படித்திருந்தாலும், ஹேராம் படத்தில் பிஸியாக இருந்ததால் படம் கை நழுவியுள்ளது.
News September 4, 2025
மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை IIT

17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை IIT முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 2-ம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடமும் பிடித்துள்ளன. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கிருஷ்ணம்மாள் கல்லூரி 9-வது, PSG கல்லூரி 10-வது இடத்தையும் பிடித்தன.
News September 4, 2025
தொலைநோக்கு பார்வையுடன் GST வரி மாற்றம்: EPS

GST வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்த மத்திய அரசுக்கு EPS வரவேற்பு தெரிவித்துள்ளார். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தத்துடனும், தொலை நோக்கு பார்வையுடனும் PM மோடி கொண்டு வந்த மாற்றத்துக்கு பாராட்டுகள் என EPS பதிவிட்டுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் வரி மாற்றம் முன்னேற்றத்தை உறுதி செய்யும் எனவும் EPS குறிப்பிட்டுள்ளார். வரி குறைப்பால், மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.