News October 25, 2025
நெல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்

ஜப்பான், சவுதி, ஈராக், சீனா உள்ளிட்ட 26 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளதாக, இந்திய அரசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் தேவ் கார்க் தெரிவித்துள்ளார். மேற்கூறிய நாடுகள் ₹1.80 லட்சம் கோடி மதிப்பில் இந்தியா அல்லாத பிற நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா 172 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 25, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 499 ▶குறள்: சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. ▶பொருள்:பாதுகாப்புக்கான கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர் வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல் அல்ல.
News October 25, 2025
NATIONAL ROUNDUP: தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது

*ஜம்மு -காஷ்மீரில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் ஆளும் கட்சியான தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளன. *காற்று மாசு அதிகரிப்பால், டெல்லியில் காற்று சுத்திகரிப்பான், முகக்கவசம் விற்பனை அதிகரித்துள்ளது. *ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே ஆற்றில் குளித்த 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
* ₹256 கோடி போதைப்பொருளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டாளி கைது
News October 25, 2025
உலகின் 8-வது கண்டம் தெரியுமா?

உலகின் 8வது கண்டத்தை புவியியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நிலப்பரப்பின் பாறை மாதிரிகளை ஆய்வுசெய்த விஞ்ஞானிகள், இந்த கண்டம் 375 ஆண்டுகளாக நீருக்குள் மறைந்திருப்பதாகவும், புதிய கண்டத்தின் 94% பகுதிகள் நீருக்குள் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மொத்தமாக 49 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட இந்த கண்டத்துக்கு Zealandia என்றும் பெயர் வைத்துள்ளனர். SHARE IT


