News April 2, 2024

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS

image

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கை ரேகைப் பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகைப் பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31உடன் முடிவடைந்த நிலையில் பதிவு செய்யாதவர்கள் பொருட்கள் வாங்க முடியாது என்று தகவல் வெளியானது. கூட்டுறவுத் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.

Similar News

News January 9, 2026

ஜனநாயகன் ரிலீஸில் அடுத்த சிக்கல்

image

<<18806253>>ஜனநாயகனுக்கு U/A சான்றிதழ் <<>>வழங்க வேண்டும் என்ற ஐகோர்ட் நீதிபதி ஆஷாவின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம் திங்கள்கிழமை அன்று மனுவை விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. இதனிடையே, மேல்முறையீட்டு மனு இன்று மதியம் 2:15 மணி அளவில் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2026

ராமதாஸ் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை

image

தைலாபுரம் தோட்டத்தில் நாளை கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணியை உறுதிபடுத்தவில்லை. இந்நிலையில் இன்று முதல் 4 நாள்களுக்கு வேட்பாளர் விருப்பமனுக்களை பெறுகிறோம் என்றும், தேர்தலில் ராமதாஸ் அமைக்கிற கூட்டணியே மிகப்பெரிய வெற்றியை பெறும் எனவும் GK மணி கூறியுள்ளார்.

News January 9, 2026

உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

image

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலகம், திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலை வாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவை பார்த்து பயனடையுங்கள். உங்களுக்கு மெனுவில் Jobs பிரிவு வரவில்லை எனில் Way2News App-ஐ அப்டேட் செய்யவும்.

error: Content is protected !!