News October 13, 2024

பல்சர் லவ்வர்களுக்கு குட் நியூஸ்!

image

மேம்பட்ட அம்சங்களுடன் Pulsar N125 என்ற புதிய மாடல் பைக் வரும் 16ஆம் தேதி அறிமுகமாகும் என பஜாஜ் அறிவித்துள்ளது. 125 சிசி, சிங்கிள் சிலிண்டர் மோட்டார் கொண்ட இந்த பைக்கின் விலை ₹95,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் TVS Raider 125 மற்றும் Hero Xtreme 125R ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்சருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 10, 2025

தூய்மை பணியாளர்களுக்கு சீமான் ஆதரவு

image

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை சீமான் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தூய்மை பணியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய சீமான் தூய்மை பணியாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசை கேட்டுக்கொண்டார்.

News August 10, 2025

சிம்பு, வெற்றி மாறன் படம் கைவிடப்பட்டதா?

image

சிம்பு – வெற்றி மாறன் இணைந்துள்ள புதிய படத்தின் புரோமோவுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்டத்துக்கு படம் நகரவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவியது. இதனிடையே பேட்டி ஒன்றில் படத்தின் அறிவிப்பு புரோமோ விரைவில் வெளியாகும் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். ஷூட்டிங் உடனடியாக ஆரம்பிக்க போவதாகவும் அப்டேட் கொடுத்து சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

News August 10, 2025

உரிமைத் தொகை.. உடனுக்குடன் ஆன்லைனில் பதிவு

image

ஜூலை 15-ம் தேதி முதல் சுமார் 12 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை கொடுத்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை உடனடியாக ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர், தகுதியுள்ள அனைவரும் ₹1,000 வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். நீங்க விண்ணப்பித்து விட்டீர்களா?

error: Content is protected !!