News March 29, 2024
PhonePe பயனர்களுக்கு GOOD NEWS

UPI செயலியான PhonePe பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கான கரன்ஸியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பணப் பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் UPI இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்திருப்பதன் மூலம் PhonePe இந்த சேவையை வழங்கவுள்ளது.
Similar News
News November 28, 2025
டிட்வா புயலின் வேகம் குறைந்தது: IMD

சென்னையில் இருந்து 510 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மணிக்கு 4 கிமீ வேகத்தில் பயணித்து வந்த புயல் இப்போது 3 கிமீ அளவுக்கு தனது வேகத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. டிட்வா புயலின் தாக்கத்தால் ஏற்கெனவே 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
எம்மா எம்மா இன்னாமா இது…

புது புது பியூட்டி டிப்ஸ் டிரெண்டாவது வழக்கம். அதுபோல தற்போது பெண்கள் மாதவிடாய் ரத்தத்தை முகத்தில் தடவுவது டிரெண்டாகி வருகிறது. மாதவிடாய் ரத்தத்தில் ஸ்டெம் செல்கள், புரதம் இருப்பதால் இது முகத்தை பொலிவாக்குவதாக இதை செய்பவர்கள் சொல்கின்றனர். ஆனால், ரத்தத்தில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருப்பதால், இது முகத்தில் Dermatitis எனும் மோசமான நோயை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News November 28, 2025
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்: ரகுபதி

செங்கோட்டையன் தவெகவை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்வார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என்று விமர்சித்துள்ளார். விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைத்து செல்லும் அசைன்மென்ட்டிற்காக தான் செங்கோட்டையன் அங்கு அனுப்பப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.


