News March 23, 2025
வெங்காய விவசாயிகளுக்கு குட் நியூஸ்…!

வெங்காய ஏற்றுமதி மீதான 20% வரியை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தாண்டு மானாவாரி பருவத்தில் வெங்காய உற்பத்தி 2.27 கோடி டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைவிட 18% அதிகம். உற்பத்தி அதிகரிப்பால் நாசிக் வெங்காயத்தின் விலை சந்தையில் சரிந்துள்ளது. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க மத்திய அரசு ஏற்றுமதி வரியை ரத்து செய்துள்ளது.
Similar News
News March 24, 2025
திமுக கூட்டணியில் விரிசலா?

திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து தவாக தலைவர் வேல்முருகன் பேசியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சட்டப்பேரவையில் அவருக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொடர்வதோ, விலகுவதோ குறித்து தனித்து முடிவெடுக்க முடியாது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியாக முடிவெடுத்து வெளிப்படையாக அறிவிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 24, 2025
வள்ளலார் பொன்மொழிகள்

*உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, பசியில் இருப்போருக்கு வயிறார உணவு கொடுங்கள். அதுவே கடவுளுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். *பிறருடைய பசியைப் போக்குவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்து விடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களை களையவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். *உடலை வருத்தி விரதம் இருப்பதைவிட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.
News March 24, 2025
6 நாட்களுக்கு பின் கலவரம் ஓய்ந்தது

மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி சில அமைப்புகள் தொடங்கிய போராட்டம் பின் கலவரத்தில் முடிந்தது. குறிப்பாக நாக்பூரில் கடந்த 17-ம் தேதி பெரும் வன்முறை வெடித்தது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பதற்றம் தணிந்துள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படுவதாகவும், முதல்வர் பட்னவிஸ் அறிவித்துள்ளார்.