News August 15, 2024
சினிமா காதலர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

70ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளன. இந்தியாவின் முக்கிய திரைப்பட விருதாக கருதப்படும் இவ்விருதுகளை, குடியரசுத் தலைவர் வழங்குகிறார். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தேசியக் குழு விருதுக்கான வெற்றியாளர்களை தேர்வு செய்கிறது. சிறந்த திரைப்படம், இயக்குநர், நடிகர், நடிகை உள்பட பல பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளன. விருது பெறும் என நீங்கள் நினைக்கும் படத்தை கமெண்ட் செய்யுங்கள்.
Similar News
News November 27, 2025
தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சிகள் இல்லை, 2-ம் ஒன்று போலவே செயல்படுகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். தூய்மையான ஆட்சி TN-ல் உருவாக வேண்டும் என தெரிவித்த அவர், அதனால்தான் ’அன்பிற்கினிய இளவல்’ விஜய்யின் கட்சியில் இணைந்ததாகவும் பேசியுள்ளார். மேலும், 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி நடக்கும் எனவும் மக்களால் வரவேற்கப்படுகிற விஜய் வெற்றிபெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2-வது திருமணம் ❤️(PHOTOS)

பிரபல தமிழ் நடிகை சம்யுக்தாவிற்கு கிரிக்கெட்டர் அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சம்யுக்தா ஷான், விஜய்யுடன் வாரிசு, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த் 2008- 15 வரை IPL-ல் விளையாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினர் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.


