News March 19, 2024
CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் காயமடைந்தார். பின் நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-இல் தூக்கிச் சென்றனர். இதையடுத்து IPL தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே செய்திகள் வெளியானது. இந்நிலையில், காயம் குணமடைந்ததால் IPL தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை கிளம்பியுள்ளார். இவரது வருகை CSK அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
Similar News
News December 6, 2025
பாடங்களுடன் கலையையும் கற்பிக்க வேண்டும்: அன்புமணி

<
News December 6, 2025
திங்கள்கிழமை பள்ளிகள் இங்கு விடுமுறை

ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கையொட்டி, டிச.8-ம் தேதி (திங்கள்கிழமை) காஞ்சிபுரம் மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்நாளில், அங்குள்ள 113 பள்ளிகள் செயல்படாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், தமிழகத்தில் டிச.12 வரை மழை நீடிக்கும் என IMD தெரிவித்துள்ளது. மழைப்பொழிவை பொறுத்து பிற மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
News December 6, 2025
எடையை குறைக்க உதவும் ‘கொத்தமல்லி’

சமையலில் மணம், சுவைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *கொத்தமல்லி விதையில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பை குறைக்க உதவுகிறது. *கொத்தமல்லி இலையில் உள்ள குவர்செடின் எனும் வேதிப்பொருள் பசியை கட்டுப்படுத்தி, கலோரிகளை எரிக்கிறது. *இதை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது *இதயம், தோல், மூளைக்கும் நல்லது.


