News December 15, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு நற்செய்தி அளிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை அகவிலைப்படி (Dearness Allowance) உயர்த்தப்படுவது வழக்கம். 2024 தீபாவளி பரிசாக DAவை 3% மத்திய அரசு உயர்த்தியது. தொடர்ந்து, 2025ல் மேலும் 3% DAவை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, DA 53%ல் இருந்து 56%ஆக உயர உள்ளது. 2025 மார்ச் மாதம் இந்த அகவிலைப்படி உயர்த்தப்படும் எனத் தெரிகிறது.
Similar News
News September 15, 2025
இன்றிரவு 12 மணிக்குள் இதை செய்யுங்கள்

வருமானவரி கணக்கு தாக்கல் (IT Returns) செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி என வருமானவரித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே, உங்கள் கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் <<17715443>>தாக்கல்<<>> செய்துவிடுங்கள். தவறினால் <<17712332>>₹5,000 அபராதம்<<>> செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6.7 கோடி பேர் தங்கள் IT Returns-ஐ தாக்கல் செய்துள்ளனர்.
News September 15, 2025
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக கோபப்பட்ட மோகன்லால்

மலையாள பிக்பாஸில் தன்பாலின ஜோடி பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இவர்களை போன்றோரை தங்கள் வீட்டிற்குள்ளே விடமாட்டோம் என்று சக பெண் போட்டியாளர்கள் கூறினர். ஆனால், அவர்களுக்கான அங்கீகாரத்தை கோர்ட்டே கொடுத்துள்ளபோது, இப்படி கூற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? என தொகுப்பாளரான மோகன்லால் கோபமாக கேட்டார். இவர்களை தன் வீட்டுக்குள் அனுமதிப்பேன் என்றும் கூறிய அவரது கருத்துக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.
News September 15, 2025
விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி: ஐ.பெரியசாமி

விஜய்யை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். விஜய் சினிமா நடிகர் என்பதால், பொழுதுபோக்கிற்காக அவரை பார்க்க மக்கள் கூட்டமாக செல்வதாகவும் கூறியுள்ளார். 2026 தேர்தலில் 2-வது இடத்தை பிடிக்க EPS முயற்சிப்பதாகவும், 3-வது இடத்துக்கு சீமானும், விஜய்யும் போட்டி போடுவதாகவும் அவர் தெரிவித்தார்.