News March 1, 2025
ரெக்கார்ட்ஸை தெறிக்க விடும் குட் பேட் அக்லி..!

அஜித்தின் குட் பேட் அக்லி டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 2.6 கோடி பார்வைகளை கடந்து இருக்கிறது. மாஸ் ஆக்சன் கதைக்களத்தில் அஜித்தை கொண்டாடக் காத்திருக்கும் ரசிகர்களுக்கு பக்கா ட்ரீட்டை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தான் வெளிவர இருப்பதால், ‘அய்யய்யோ… வெயிட்டிங்கிலேயே வெறி ஏறுதே’ என அஜித் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
Similar News
News March 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: மேலும் சில லட்சம் பேர் சேர்ப்பு?

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் சில லட்சம் பேர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விரைவில் தகுதியான பெண்களை இந்தத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.
News March 1, 2025
PNB வங்கியின் வீட்டு கடன் வட்டி குறைப்பு.. இன்று அமலானது

EBLR உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடனுக்கான வட்டியை பஞ்சாப் நேசனல் வங்கி அண்மையில் குறைத்தது. இந்த வட்டி குறைப்பு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்திருந்தது. அதன்படி, வட்டி குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புளோட்டிங் வட்டி விகிதத்தில் புதிதாக வாங்கிய வீட்டு கடன் அனைத்தும் இபிஎல்ஆருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இபிஎல்ஆரில் செய்யப்படும் மாற்றம், இஎம்ஐயில் பிரதிபலிக்கும்.
News March 1, 2025
காவல்துறை செய்தது தவறு: அண்ணாமலை

சீமான் விவகாரத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை சரியல்ல என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சீமானிடமே நேரில் சம்மனை வழங்கியிருக்கலாம் என கூறிய அவர், தேடப்படும் குற்றவாளியின் வீட்டில்தான் சம்மன் ஒட்டுவார்கள் என்றார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்று விமர்சித்த அவர், காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.