News April 4, 2025
Good Bad Ugly டிரெய்லர்.. இன்னைக்கு ரிலீஸ்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் ‘Good Bad Ugly’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவிப்பு. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது.
Similar News
News April 10, 2025
RBI விதிமுறையால் இனி நகைக் கடன் வாங்குவதில் சிரமம்!

RBI-ன் புதிய விதிகள் தங்க நகைக் கடன் வாங்குவதை சிரமமாக்கியுள்ளது. *கடனளிப்பவரின் Risk Management-ஐ ஆராய வேண்டும்.*முறையாக மதிப்பீடு செய்த பிறகே கடன் வழங்க வேண்டும்.*கடன் வாங்குபவர் அதைத் திருப்பி மீட்கும் தகுதி உள்ளவரா என்பதை செக் செய்ய வேண்டும்.*1 கிலோவுக்கு மேல் ஒரே நேரத்தில் அடகு வைக்க அனுமதிக்கக் கூடாது ஆகிய விதிகளால் தங்க நகைக் கடன் பெறுவதில் சிரமம் ஏற்படும் எனப் பலரும் புலம்பி வருகின்றனர்.
News April 10, 2025
அன்புமணி நீக்கம்.. வெளியே சொல்ல முடியாத காரணம்

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியது குறித்து ராமதாஸ் விளக்கமளித்துள்ளார். அதில், சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ சென்றதில்லை; எனக்கு பதவி பெறும் ஆசையும் இல்லை. ஆனால், தலைவரை மாற்ற பல காரணங்கள் உண்டு. எல்லாவற்றையும் வெளியே பகிர்ந்து கொள்ள முடியாது. 2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விஷயங்களை கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
News April 10, 2025
தர்பூசணியை பார்த்து பயம் வேண்டாம்

சமீபத்தில் வெளியான சர்ச்சை வீடியோவால் தர்பூசணியை வங்க மக்கள் அச்சமடைந்துள்ளனர். உண்மையில் தர்பூசணி கோடை காலத்தில் சிறந்த பழம். தர்பூசணியில் உள்ள அமினோ அமிலம் ரத்த ஓட்டத்தை சீராக்கி ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது, அதேபோல் லைகோபீன், சிட்ரலன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. தர்பூசணியில் 96% நீர் இருப்பதால், உடலுக்குத் தேவையான நீர் சத்தையும் அளிக்கிறது.