News April 10, 2025
‘குட் பேட் அக்லி’ HD வீடியோ வெளியானது

அஜித் நடிப்பில் இன்று வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘ஒன் மேன் ஆர்மி’யாக படம் முழுவதையும் தோளில் சுமந்து அமர்க்கள படுத்தியுள்ளார் அஜித். கோட்சூட், இளமை தோற்றங்களில் அஜித் வரும் போதெல்லாம் அரங்கம் அதிர்கிறது. பாசிட்டிவ் விமர்சனம் வரும் நிலையில், இப்படத்தின் HD வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Similar News
News April 18, 2025
பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

*பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் <
News April 18, 2025
காலமுறை ஊதியம் வழங்குக: ஓபிஎஸ் வலியுறுத்தல்

வருவாய்த்துறை கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குமாறு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். பெருமழை, புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது இரவு, பகல் பாராமல் உழைக்கும் கிராம உதவியாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News April 18, 2025
நடுவானில் விமானத்தில் நடந்த சம்பவம்

மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் இருந்து சிறிய ரக விமானத்தை கத்திமுனையில் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோரோஷல் நகரில் இருந்து சுற்றுலா தலமான பெட்ரோவுக்கு 14 பயணிகள், 2 விமானிகளுடன் அந்த விமானம் புறப்பட்டது. நடுவானில் கத்திமுனையில் ஒருவர் விமானத்தை கடத்த முயன்றபோது, பயணி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றார். கொல்லப்பட்டவர் அமெரிக்கர் என தெரியவந்தது.