News March 18, 2024
உலக வரலாற்றின் பொன்னான பக்கங்கள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது உலக வரலாற்றின் பொன்னான பக்கங்கள் என ஆர்.ஆர்.எஸ் அமைப்பு பாராட்டியுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், நூற்றாண்டுகளாக இந்து சமுதாயத்தின் இடைவிடாத போராட்டம்,தியாகம், மற்றும் மகான்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடு தழுவிய இயக்கங்கள், பல்வேறு பிரிவுகளின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானதாக கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 3, 2025
ராசி பலன்கள் (03.04.2025)

➤மேஷம் – உறுதி ➤ரிஷபம் – பெருமை ➤மிதுனம் – சுகம் ➤கடகம் – உயர்வு ➤சிம்மம் – தெளிவு ➤கன்னி – சுபம் ➤துலாம் – இரக்கம் ➤விருச்சிகம் – அலைச்சல் ➤தனுசு – பயம் ➤மகரம் – அமைதி ➤கும்பம் – குழப்பம் ➤மீனம் – சாதனை.
News April 3, 2025
வக்ஃப் (திருத்த) சட்ட மசோதா என்பது என்ன?

நாடு முழுவதும் உள்ள வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டை திருத்தியமைத்து, அவற்றின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பை உறுதிப்படுத்த புதிய சட்ட மசோதா வழி செய்கிறது. இதற்காக1995-ல் கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கு கூடுதல் உரிமைகள் வழங்கவும் இதில் வழி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News April 3, 2025
பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் புது உச்சம்

பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியில் இந்தியா புது உச்சம் படைத்துள்ளது. 2025ம் நிதியாண்டில் மட்டும் இந்தியா தனது நட்பு நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு பிரமோஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை ரூ.23,622 கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2024ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்த ரூ.21,803 கோடி பாதுகாப்பு தளவாடங்களுடன் ஒப்பிடுகையில் இது 12.04% அதிகமாகும். ரூ.23,622 கோடியில் தனியாரின் பங்களிப்பு ரூ.8,389 கோடியாகும்.