News August 9, 2024
வாழ்நாளில் பொன்னான நாள்: CM ஸ்டாலின்

மாணவர்களுக்குத் துணையாக, அவர்களது பெற்றோர் மட்டுமல்ல, தானும், தனது திராவிட மாடல் அரசும் பக்கபலமாக இருக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வாழ்வில் சில நாள்கள் வரலாற்றில் நம்மை இடம்பெற வைக்கக்கூடியதாக அமையும் எனவும், அத்தகைய நாள், தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட இந்த பொன்னாள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News September 16, 2025
பணியிட அவமானத்தால் தற்கொலை: ₹90 கோடி இழப்பீடு

பணியிடத்தில் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்த பெண்ணின் குடும்பத்தாருக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனம் ₹90 கோடி இழப்பீடு வழங்க ஜப்பான் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ல் சடோமி (25) என்ற பெண்ணை, நிறுவன தலைவர் தெரு நாய் என கூறி அவமானப்படுத்தியதால் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிய, கோமாவில் இருந்த அவர் 2023-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தார் கோர்ட்டை அணுகினர்.
News September 16, 2025
பாஜகவுக்கு நன்றிக்கடன் பட்டுள்ள இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி வைக்க என்ன காரணம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜெ., மறைந்த போது, சிலர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாகவும், அப்போது அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்தியில் ஆட்சியில் இருந்தவர்கள் தான் என்று தெரிவித்த அவர், அந்த நன்றியை தான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார். ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தது பாஜக என்பது புரிகிறது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க முயன்றவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
News September 16, 2025
யுனெஸ்கோவில் சேர்க்கப்பட்ட 7 இந்திய தளங்கள்

இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் யுனெஸ்கோ 7 புதிய இயற்கை தளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. *டெக்கான் ட்ராப்ஸ்(மகராஷ்டிரா) *செயின்ட் மேரி தீவு (கர்நாடகா) *மேகலாயன் ஏஜ் குகைகள்(மேகாலயா) *நாகா ஹில் ஓபியோலைட் (நாகலாந்து) *சிவப்பு மணல் மேடுகளான எர்ரா மட்டி டிபாலு (ஆந்திரா) *திருமலை மலைகள் (ஆந்திரா), *வர்கலா (கேரளா)