News August 3, 2024
காதல் முறிவுக்கு பின் தங்கம் வென்ற ஜோடி

சில வாரங்கள் முன்பு, காதல் முறிந்து பிரிந்த செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் இணை கேத்தரினா மற்றும் தாமஸ் மச்சாக், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளனர். Breakup செய்திருந்தாலும், நாட்டுக்காக கலப்பு இரட்டையர் பிரிவில் சேர்ந்து விளையாடிய அவர்கள், சீன இணையை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். தொடர்ந்து, ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டனர்.
Similar News
News September 19, 2025
OTT-ல் வெளியாகும் மகா அவதார் நரசிம்மா

மஹா விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்று நரசிம்ம அவதாரம். இதனை மையமாக கொண்டு ‘மகா அவதார் நரசிம்மா’ என்ற படம் வெளியானது. ₹13 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ₹300 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வாரி குவித்தது. அனிமேஷன் படமாக வெளியானதால், குழந்தைகள் உள்பட அனைவரும் ரசித்தனர். இந்நிலையில், இந்தப் படம் நாளை முதல் Netflix தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகிறது.
News September 19, 2025
75 வயதில் விரதமிருக்கும் PM மோடி

செப்.17-ம் தேதி 75-வது பிறந்தநாள் கொண்டாடிய PM மோடி, ஜூன் மத்தியில் தொடங்கிய சாதுர்மாஸ் விரதத்தை கடைபிடித்து வருகிறார். 4 மாதங்கள் நீடிக்கும் இந்த விரத காலத்தில் PM ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு சாப்பிடுவார். 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் PM, உணவு சாப்பிடுவதை தவிர்த்து தண்ணீர் மட்டுமே குடிப்பார் என்று கூறப்படுகிறது. அதே போல சைத்ர நவராத்திரி விரதத்தையும் பிரதமர் கடைபிடிக்கிறார்.
News September 19, 2025
ரோபோ சங்கருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர் எனவும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவிற்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.