News December 14, 2024

ஒரே ஆண்டில் 30% உயர்ந்த தங்கம்

image

நடப்பாண்டில் தங்கத்தின் விலை 30% அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளில் இதுவே அதிகபட்ச உயர்வாகும். இது தொடர்பான அறிக்கையில், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தின் இருப்பை அதிகரித்ததும், முதலீட்டாளர்கள் தங்கத்தை அதிகம் வாங்கியதுமே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் ₹5,900ஆக இருந்த ஒரு கிராம் தங்கம் தற்போது ₹7,300 வரை உயர்ந்துள்ளது.

Similar News

News March 11, 2026

IPL-ல் ஆரம்பமே அமர்க்களமா இருக்கும் போலயே!

image

IPL போட்டிகள் மார்ச் 28-ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்தியா முழுவதும் IPL Fever தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரசிகர்களை மேலும் ஹைப் ஏற்றும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது IPL முதல் போட்டியிலேயே RCB-ம் CSK-ம் மோதவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை(மார்ச் 12) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 11, 2026

பச்சைத் துரோகம் செய்த இபிஎஸ்: ஐ.பெரியசாமி

image

மோடி அரசின் செயல்பாடு 100 நாள் வேலை திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக்கட்டும் முடிவில் இருப்பதையே காட்டுவதாக ஐ.பெரியசாமி விமர்சித்துள்ளார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து EPS பச்சைத் துரோகம் செய்துவிட்டார் என சாடிய அவர், கிராமபுறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்துக்கு துணைபோன EPS-க்கு மக்கள் வரும் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் எனத் தெரிவித்தார்.

News March 11, 2026

பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்தது.. ₹8 லட்சம் கோடி LOSS!

image

LPG தட்டுப்பாடு விவகாரம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ் 1,080 புள்ளிகள் சரிந்து 77,100 ஆகவும், நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 24,007 ஆகவும் மளமளவென குறைந்துள்ளது. இதனால், இன்று சுமார் ₹8 லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், IOC, BPC, HPC உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 2% வரை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!