News February 17, 2025
தங்கம் சவரனுக்கு ₹400 உயர்வு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் இன்று (பிப்.17) உயர்ந்துள்ளது. கிராமுக்கு ₹50 உயர்ந்து ஒருகிராம் ₹7,940க்கும், சவரனுக்கு ₹400 உயர்ந்து ஒரு சவரன் ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹108க்கும், ஒரு கிலோ ₹1,08,000க்கும் விற்கப்படுகிறது. கடந்த 1 வாரத்தில் சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏறக்குறைய அதற்கு ஈடாக விலை அதிகரித்துள்ளது.
Similar News
News November 11, 2025
கிரிக்கெட் வீராங்கனை பெயரில் ஸ்டேடியம்!

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியில் சிறந்த பினிஷராக திகழ்ந்தவர் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ். இந்நிலையில், அவரது பெயரில் மேற்கு வங்கத்தில் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என அம்மாநில CM மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முன்னதாக, மாநில அரசின் உயரிய விருதான பங்கா பூஷன் விருதும், காவல்துறையில் DSP பணியும் அவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News November 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 11, 2025
குண்டு வெடிப்புக்கு மோடி, அமித்ஷா பொறுப்பு: திருமா

நாட்டின் தலைநகரிலேயே, உயர் பாதுகாப்பு வளையத்துக்குட்பட்ட பகுதியிலேயே காரில் வெடிமருந்தை நிரப்பிக்கொண்டு எப்படி ஊடுருவமுடிந்தது என திருமா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை மற்றும் உளவுத்துறை ஆகியவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‘மோடி-அமித்ஷா-அம்பானி’ கூட்டணி தானே இதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், குற்றவாளிகள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


