News March 7, 2025
தங்கக் கடத்தல்: நடிகை ஒப்புதல்

துபாயில் இருந்து 17 தங்கக்கட்டிகளை கடத்தி வந்ததை நடிகை ரன்யா ராவ் ஒப்புக் கொண்டுள்ளார். ரூ.12.56 கோடி மதிப்பு 14.8 கிலோ தங்கத்தை கடத்தி வந்ததாக, அண்மையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர், தங்கக்கட்டிகளை தாம் உடலில் மறைத்து கடத்தி வந்ததாக கூறியுள்ளார். கடத்தலுக்காக மூத்த காவல்துறை அதிகாரி ராமசந்திர ராவின் உறவினர் என்ற அடையாளத்தை பயன்படுத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Similar News
News March 9, 2025
கத்திய மஸ்க்; வேடிக்கைப் பார்த்த டிரம்ப்!

அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் எலான் மஸ்க் வாக்குவாதம் செய்துள்ளார். அதனை அதிபர் டிரம்ப் வேடிக்கை பார்த்து மெளனமாக இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஒன்றுமே நடக்கவில்லை என கோபத்துடன் அவர் கூறியதும் பேசுபொருளாகியுள்ளது. பணி நீக்கம் தொடர்பாக மஸ்க்குக்கும், ரூபியோவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
News March 9, 2025
சிக்கன் விலை தெரியுமா?

நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் கூடிய கறிக்கோழி விலை 1 கிலோவுக்கு ரூ.107ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 கிலோ கோழிக்கறி ரூ.175 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. இதேபோல், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட நகரங்களில் முட்டை ரூ.4.50 முதல் ரூ.5 வரை விற்கப்படுகிறது.
News March 9, 2025
சிரியாவில் சண்டை தீவிரம்: 1,000க்கும் மேற்பட்டோர் பலி

சிரியாவில் அரசு படையினருக்கும், EX அதிபர் ஆசாத் ஆதரவாளர்களுக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. அசாத் ஆதரவாளர்களின் பகுதிக்குள் புகுந்து அரசு பாதுகாப்பு படைகள் 2 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அப்பாவி மக்கள் 750 பேர் உள்பட இதுவரை 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல இடங்களில் மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.