News October 24, 2024

தங்கம் சவரனுக்கு ரூ.440 குறைவு

image

கடந்த சில நாள்களாக வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ஒரு சவரன் 58,280க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ஒரு கிராம் 7,285க்கும் விற்பனையாகிறது. சவரன் ₹59,000ஐ நெருங்கிய நிலையில், சற்று விலை குறைந்தது நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு சிறிய ஆறுதல் தந்துள்ளது.

Similar News

News January 14, 2026

கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

கடலூர் மாவட்டத்தில் வருகிற ஜன.16ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜன.26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, 2 நாட்களுக்கு அனைத்து சில்லறை மதுபான கடைகளும், மனமகிழ் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News January 14, 2026

Cinema Roundup: ‘போர்’ முரசு ஒலிப்பாரா தனுஷ்?

image

*அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘வித் லவ்’ படத்தின் 2-ம் பாடல் வெளியானது. *பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரும் 23-ம் தேதி ரிலீசாகிறது. *தனுஷ் நடிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் இயக்கும் ‘D54’ படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என தகவல். *‘மரகத நாணயம் 2’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. *அல்லு அர்ஜுன் -லோகேஷ் இணையும் படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என தகவல்.

News January 14, 2026

தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த தங்கம் இன்று(ஜன.14) சற்று குறைந்துள்ளது. 1 அவுன்ஸ்(28g) $11 குறைந்து $4,597-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலை 1 அவுன்ஸ் $3 உயர்ந்து $88 ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவால் இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!