News April 29, 2025
ஏப்ரல் மாதத்தில் ஏறுமுகத்தைக் கண்ட தங்கம்!

தங்கம் விலை இம்மாதம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் 1 கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் (28 நாள்களில்) கிடுகிடுவென உயர்ந்து <<16251745>>இன்று<<>> (ஏப்.29) ஒரு சவரன் ₹71,840-ஆக விற்பனையாகிறது. அதாவது இம்மாதத்தில் மட்டும் சவரனுக்கு ₹3,760 உயர்ந்துள்ளது. நாளை(ஏப்.30) அட்சய திருதியை என்பதால் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
News April 29, 2025
நம்மூரிலும் வந்தாச்சு ரோபோ காப்..!

போலீஸ் இல்லாத நேரத்தில் தனியாக போகும் போது, யாராவது பிரச்னை கொடுப்பாங்க என இனி பெண்களுக்கு பயம் வேண்டாம். வந்தாச்சு ரெட் பட்டன்-ரோபோட்டிக். சென்னையின் 200 இடங்களில் இவர்கள் களமிறக்கப்படவுள்ளனர். 24 மணி நேரமும் ஆன் டூட்டிதான். ஏதாவது பிரச்னை என்றால், இவரிடம் இருக்கும் ரெட் பட்டனை அழுத்தினால் போதும், காவல் கட்டுபாட்டு அறையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இவரிடம், வீடியோ கால் வசதியும் உண்டு.
News April 29, 2025
3-வது குழந்தைக்கு சலுகை வேண்டும்: MLA கோரிக்கை

3-வது குழந்தை பெற்றுக் கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக பர்கூர் MLA மதியழகன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவதால் தொகுதி மறுசீரமைப்பின் போது பிரச்னை எழும் என சுட்டிக் காட்டி இந்த கோரிக்கையை அவர் சட்டமன்றத்தில் வைத்துள்ளார். ஏற்கனவே தொகுதி மறுசீரமைப்புக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கை கவனம் பெற்றுள்ளது.