News April 11, 2025
3 நாள்களில் ₹4,160 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,225-க்கும், சவரன் ₹65,800-க்கும் விற்பனையான நிலையில், இன்று காலை நேர வர்த்தகப்படி ஒரு கிராம் ₹8,745-க்கும், சவரன் ₹69,960-க்கும் விற்பனையாகிறது. 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,160 அதிகரித்துள்ளது. இது வரும் நாள்களில் மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 23, 2025
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.23.51 லட்சத்திற்கு விற்பனை!

நாமக்கல்லில் காலை, மாலை என இருவேளை உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த 55,010 கிலோ காய் கனிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனிடையே கடந்த வாரம் ரூ.23,51,570 விற்பனையானது. உழவர் சந்தைக்கு 11,002 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிச் சென்றனர்.
News November 23, 2025
கண்களால் கொள்ளை கொள்ளும் வாமிகா கபி

‘மாலை நேரத்து மயக்கம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வாமிகா கபி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ‘DC’ படத்தில் நடிக்கிறார். இவருக்கு, DC டைட்டில் டீசரிலேயே பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது. இவரது இன்ஸ்டா பதிவுகள், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன. சமீபத்தில், பதிவிட்ட போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 23, 2025
அதிமுக மூத்த தலைவர் காலமானார்.. இபிஎஸ் இரங்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் சம்பந்தியும், கட்சியின் மூத்த தலைவருமான சிந்து சண்முகம் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக் குறைவால் அவர் மறைந்த செய்தியை அறிந்து வேதனையுற்றதாகவும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்வதாகவும் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதிமுகவில் பவானி நகரச் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை சிந்து சண்முகம் வகித்திருக்கிறார். RIP


