News March 29, 2025
4 நாள்களில் ₹1,400 உயர்ந்த தங்கம்

தங்கம் விலை கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹1,400 உயர்ந்துள்ளது. இது, தங்கத்தில் முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியடைய செய்திருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் கடந்த 1ஆம் தேதி ₹63,520க்கு விற்பனையான ஒரு சவரன், ₹3,360 அதிகரித்து இன்று (மார்ச் 29) வரலாறு காணாத உச்சமாக ₹66,880ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.
News December 16, 2025
கேரளத்தின் வெற்றி TN-ல் எதிரொலிக்கும்: நயினார்

கேரளாவின் திருவனந்தபுரம் மாநகராட்சியை <<18551942>>பாஜக <<>>கைப்பற்றி இடதுசாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் கேரளத்தில் பெற்ற வெற்றி விரைவில் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான மனநிலை மக்களிடம் காணப்படுவதாகவும், அதை பாஜக சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் தொண்டர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News December 16, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கொடுங்கோன்மை ▶குறள் எண்: 551 ▶குறள்:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
▶பொருள்: அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.


