News April 18, 2025

தங்கம் கையிருப்பு: 2-வது இடத்தில் இந்தியா!

image

தங்கத்தின் விலை ஆண்டு இறுதிக்குள் சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டி விடும் அளவுக்கு தினசரி உயர்ந்து வருகிறது. இதனால் சாமான்ய மக்களுக்கு இந்த மஞ்சள் உலோகம் எட்டாக் கனியாகி வருகிறது. எனினும், தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் ஆசிய நாடுகளில் இந்தியா 2-வது இடத்தை பிடித்திருக்கிறது. மொத்தமாக இந்தியாவிடம் 854 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கிறது. 2,263 மெட்ரிக் டன்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

Similar News

News October 27, 2025

சற்றுமுன்: இளம் நடிகர் தற்கொலை

image

பாலிவுட்டில் பிரபலமான ஜம்தாரா 2 வெப் சீரிஸில் நடித்து கவனம் ஈர்த்த இளம் நடிகர் சச்சின் சாந்த்வாடே(25) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் வசித்துவந்த அவர், வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். சாஃப்ட்வேர் என்ஜினியரான சச்சின், மராத்தி படங்களின் மூலம் திரையுலகில் அடியெடித்து வைத்துள்ளார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 27, 2025

பிப்.7-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு பிப்.7-ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. * நவ.4-ம் தேதி முதல் டிச.4-ம் தேதி வரை வீடு வீடாக Enumeration Forms வழங்கப்படும். *டிச.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. *டிச.9 முதல் 2026 ஜன.8-ம் தேதி வரை வாக்காளர்கள் தங்களது ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். *இறுதிக்கட்ட சரிபார்ப்பு பணி டிச.9 முதல் 2026 ஜன.31 வரை நடைபெறும்.

News October 27, 2025

Sports Roundup: ரஞ்சியில் பிரித்வி ஷா இரட்டை சதம்

image

*காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்களில் இருந்து பி.வி.சிந்து விலகல். *ரஞ்சி கோப்பையில் 3-வது அதிக வேக இரட்டை சதத்தை பிரித்வி ஷா பதிவு செய்துள்ளார். *முதல் ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என அறிவிப்பு. *ஆசிய யூத் கேம்ஸ், மகளிர் 3*3 கூடைப்பந்து காலிறுதியில் இந்தியா 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானிடம் தோல்வி.

error: Content is protected !!