News April 26, 2025
தங்கம் விலை மேலும் சரியும்.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

<<16212631>>தங்கம்<<>> விலை மேலும் சரியக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளதால், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை 42% உயர்ந்து, கடந்த 22-ம் தேதி உச்சம் தொட்டது. எனினும் 23, 24-ம் தேதிகளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,280 சரிந்தது. நேற்று விலையில் மாற்றமில்லை. USA டாலர் மீதான முதலீடு அதிகரிப்பதும், சீனா-USA வர்த்தக போர் தீவிரம் குறைவதாலும், தங்கம் விலை மேலும் குறையலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News September 17, 2025
BREAKING: தங்கம் விலை குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப்.17) சவரனுக்கு ₹80 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹10,270-க்கும், சவரன் ₹82,160-க்கும் விற்பனையாகிறது. நேற்று(செப்.16) சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது.
News September 17, 2025
இளைஞர்கள் வாக்குகளை குறிவைக்கும் நிதிஷ்

பிஹாரில் விரைவில் தேர்தல் வரவிருப்பதால் அம்மாநில CM நிதிஷ், இளைஞர்களின் வாக்குகளையும் குறிவைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, கல்விக்கடன் அனைத்துக்கும் வட்டி தள்ளுபடி, கல்விக்கடன் திருப்பி செலுத்தும் அவகாசம் 5-லிருந்து 7 ஆண்டுகளாக நீட்டிப்பு உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளார். இதேபோல் தான், தமிழகத்திலும் தேர்தல் நேரத்தில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருக்கிறது
News September 17, 2025
குறையும் Big Screen தியேட்டர் மோகம்!

இருட்டு ரூமில், பலருடன் அமர்ந்து சிரித்து, அழுது, கைத்தட்டி- விசிலடித்து கொண்டாடி படம் பார்த்த உணர்வை மக்கள், வேண்டாம் என ஒதுக்க தொடங்கிவிட்டனர். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படம் என்றாலும், கொஞ்சம் சுமாராக இருந்தாலும், OTT பக்கம் ரசிகர்கள் சென்றுவிடுகின்றனர். இதற்கு டிக்கெட் விலை, படங்களின் தரம் என பல காரணங்களும் உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க.. ரசிகர்கள் தியேட்டர் அனுபவத்தை தவறவிடுகிறார்களா?