News April 16, 2025
ஜெட் வேகத்தில் பறக்கும் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று ராக்கெட் வேகத்தில் பறந்திருக்கிறது. இன்று ஒரே நாளில் 100 அமெரிக்க டாலர்கள் உயர்ந்திருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, 3,322 டாலர்களுக்கு விற்பனையாகிறது. இது, நேற்றைய விலையை விட 3.1% அதிகமாகும். இதனையடுத்து, நாளைய தினம் இந்தியாவில் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,000 வரை உயரும் என்று கணிக்கப்படுகிறது.
Similar News
News November 5, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 510 ▶குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ▶பொருள்: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.
News November 5, 2025
ICC அணியில் 3 இந்திய வீராங்கனைகள்

மகளிர் உலகக் கோப்பை ஐசிசி கனவு அணியில் 3 இந்திய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீராங்கனைகளை வைத்து இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா, லாரா வோல்வார்ட் (C), ஜெமிமா ரோட்ரிக்ஸ், KAPP, ஆஷ் கார்ட்னர், தீப்தி சர்மா, டி கிளெர்க், சிட்றா நவாஸ் (WC), அலனா கிங், சோஃபி எக்லெஸ்டோன், சதர்லேண்ட் ஆகியோர் உள்ளனர். 12-வது ஆக நாட் ஸ்கிவர் ப்ரண்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
News November 5, 2025
CBSE தேர்வு அட்டவணையில் தமிழுக்கு பாதகம்: அன்புமணி

CBSE 10-ம் வகுப்பு தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 2-ம் பாடமாக இந்தியை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சாதகமாகவும், தமிழ் மாணவர்களுக்கு பாதகமாகவும் அட்டவணை இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தி தேர்வுக்கு முன்னும் பின்னும் 2 மற்றும் 4 நாள்கள் விடுமுறை இருப்பது போல, தமிழுக்கும் குறைந்தது 3 நாள்கள் இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.


