News October 2, 2025
சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

காலையில் மகிழ்ச்சியை கொடுத்த ஆபரணத் தங்கத்தின் விலை, மாலையில் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, காலையில் சவரனுக்கு ₹560 குறைந்த நிலையில், மாலையில் ₹560 அதிகரித்துள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹10,950-க்கும் ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் சவரன் ₹30,000 வரை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 2, 2025
சூர்யா உடன் மோதும் ‘மதகஜராஜா’ காம்போ

சூர்யாவின் ‘கருப்பு’ படம் 2026 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேநாளில், விஷால் நடிப்பில் சுந்தர் C இயக்கும் படத்தையும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்போது ‘மூக்குத்தி அம்மன் 2’ பட வேலைகளில் பிஸியாக இருக்கும் சுந்தர் C, விஷால் படத்தை மூன்றே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளாராம். வரும் நவம்பரில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம்.
News October 2, 2025
ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய இளம் படை

ஆஸி., U19 அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய U19 அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸி., 243/10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்தியாவோ 428/10 ரன்களை எடுத்தது. 2-வது இன்னிங்ஸில் ஆஸி., 127/10 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி 140, வைபவ் சூர்யவன்ஷி 113 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டனர்.
News October 2, 2025
‘கரூர் துயரத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம்’

கரூர் துயர சம்பவத்திற்கு CM ஸ்டாலின் தான் காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தான் 163 தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 5 மாவட்டங்களில்தான் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அதிகாரிகள் விளக்கம் அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய EPS, இனியாவது பொதுக்கூட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.