News March 4, 2025
தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 5 நாள்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று (மார்ச் 4) 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹8,010க்கு விற்பனையாகிறது. சவரன் ₹560 உயர்ந்து ₹64,080க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹107க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,07,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 4, 2025
பழிதீர்க்குமா இந்திய அணி?

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மதியம் 2:30 மணிக்கு பலப்பரிட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலத்துடன் இருப்பதால், சுவாரசியத்திற்குப் பஞ்சமிருக்காது. 2023 WC ஃபைனலின் தோல்வியை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். அதற்கு, இன்று பதிலடி கொடுக்குமா இந்தியா? என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நீங்க சொல்லுங்க யார் ஜெயிப்பாங்க?
News March 4, 2025
ஓராண்டு நிறைவு.. அம்பானி வீட்டில் கொண்டாட்டம்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சிகள் சுமார் 6 மாதங்கள் வரை நடைபெற்றன. குஜராத் ஜாம்நகரில் Hastakshar ceremony உடன் தொடங்கிய நிகழ்ச்சியில், உலக பிரபலங்கள் பில் கேட்ஸ், மார்க் சக்கர்பர்க், இவாங்கா ட்ரம்ப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
News March 4, 2025
மரண தண்டனை தராவிட்டால் தற்கொலை: நர்வால் தாயார்

காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக நர்வாலின் அம்மா கூறியுள்ளார். போலீசாரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்றும், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தர முடியாவிட்டால் தனது தற்கொலைக்கு ஹரியானா அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.