News September 7, 2025
தங்கம் விலை மேலும் உயர்கிறது

தங்கம் விலை அடுத்த 12 மாதங்களுக்கு குறைய வாய்ப்பில்லை எனவும், மேலும் உயரும் என்றும் தங்கம், வைரம் நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியுள்ளார். <<17627852>>தங்கம் விலை<<>> நேற்று வரலாறு காணாத உச்சமாக 22 கேரட் 1 சவரன் ₹80,040-ஐ எட்டியது. ரிஸ்க் இல்லாத முதலீடு தங்கம் என்பதால், இதில் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இனி தங்கம், வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டும் என்றும் கணித்துள்ளார்.
Similar News
News September 7, 2025
புடின் கீவ்வுக்கு வரலாம்: ஜெலன்ஸ்கி அழைப்பு

புடின் விடுத்த <<17626558>>அழைப்பை நிராகரித்த <<>>ஜெலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு ரஷ்ய அதிபர் வரலாம் என பதில் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், செப்டம்பரின் முதல் 5 நாள்களில் மட்டும் 1,300 டிரோன்கள், 900 குண்டுகள் மற்றும் 50 ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் ஜெலன்ஸ்கி பட்டியலிட்டுள்ளார். இதன்மூலம், பேச்சுவார்த்தை நடக்க தற்போது வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
News September 7, 2025
அதிமுக பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமா நீக்கம்

அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து Ex MP சத்யபாமாவை நீக்கி, EPS அறிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் ஆரம்பம் முதலே கே.ஏ.செங்கோட்டையனுடன் இருந்து வந்த சத்யபாமா, இன்று காலை, தான் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், EPS சற்றுமுன் அவரை நீக்கியுள்ளார்.
News September 7, 2025
சற்றுமுன்: கட்சியில் ஓபிஎஸ்-ஐ இணைக்க ஏற்பாடு

2024 தேர்தலில் தனக்காக அவரது சொந்த தொகுதியை, விட்டு கொடுத்தவர் OPS எனவும், அவருக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் TTV பேசியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனிமரமாக OPS நிற்பதாக, EPS அணியினர் சாடி வருகின்றனர். இந்நிலையில், அமமுகவில் OPS-ஐ இணைத்து அவருக்கு பொதுச்செயலாளர் பதவியை வழங்கும் முடிவை TTV தினகரன் எடுத்துள்ளதாக ஒருதரப்பினர் பேசி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?