News June 29, 2024

தங்கம் விலை மேலும் உயர்வு

image

கடந்த சில நாள்களாக குறைந்து காணப்பட்ட தங்கம் விலை, மேலும் குறைந்து சவரன் ₹53,000க்கு கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று சவரனுக்கு ₹328 உயர்ந்த விலை, இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ₹152 அதிகரித்து ₹53,480க்கும், கிராமுக்கு ₹19 அதிகரித்து ₹6,685க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ₹94.50க்கு விற்பனையாகிறது.

Similar News

News November 21, 2025

திருவாரூர்: நலிவுற்ற கலைஞர்களுக்கான சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இசை, நாடகம், கிராமிய கலைகள், சிற்பம் ஆகிய கலைத்துறைகளில் குறிப்பிடத்தக்க சேவையாற்றியவர்களில் 58 வயது நலிந்த நிலையில் வாழும் நலிவுற்ற கலைஞர்களுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் வருகிற 22-ம் தேதி அனைத்து வட்ட அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் நலிவுற்ற கலைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.

News November 21, 2025

ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் PM மோடி

image

தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் PM மோடி பங்கேற்கிறார். 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3 அமர்வுகளில் PM மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலையான பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், எதிர்கால தொழில்நுட்பம் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. மாநாட்டிற்கு மத்தியில், சில தலைவர்களுடன் PM மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 21, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மேலும் குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் 1 அவுன்ஸ்(28g) $16.32 சரிந்து $4,065-க்கும், வெள்ளி(1 அவுன்ஸ்) $0.83 குறைந்து $50.74-க்கும் விற்பனையாகிறது. நேற்று(நவ.20) சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடித்ததால் நம்மூர் சந்தையில் சவரனுக்கு ₹800 குறைந்தது. இன்றும் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!