News April 30, 2024
தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 உயர்ந்து, ₹54,000க்கும், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹6,750க்கும் விற்பனையாகிறது. அதே நேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹87க்கும், ஒரு கிலோ ₹87,000க்கும் விற்பனையாகிறது.
Similar News
News March 27, 2026
சற்றுமுன்: திமுக கூட்டணியில் இணைந்தனர்

தமிழக தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், சிறு சிறு அமைப்புகள் தங்கள் ஆதரவை பிரதான கட்சிகளுக்கு வழங்கி வருகின்றன. அந்தவகையில், இம்மானுவேல் சேகரனார் மிஷன் அமைப்பு, அம்பேத்கர் முன்னணி கழகம் & சென்னை துறைமுகம் எஸ்.சி எஸ்.டி தொழிலாளர் சங்கம் ஆகியவை திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளன. தொடர்ந்து, திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாவட்ட அளவிலான அமைப்புகளும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
News March 27, 2026
அரசின் 51 சேவைகள்.. WhatsApp-ல் ஒரு மெசேஜ் போதும்!

‘78452 52525’ என்ற WhatsApp எண்ணிற்கு ‘Hi’-னு ஒரு மெசேஜ் செய்தால் போதும். தமிழக அரசின் உள்ளாட்சித் துறை, இந்து சமய அறநிலையத்துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட 16 துறைகளின் 51 சேவைகள் ஈசியாக கிடைக்கும். தமிழக அரசின் புதிய அறிமுகமான ‘நம்ம அரசு நம்ம கையில்’ சேவைகள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், வருமான சான்றிதழ்கள், EB கட்டணம் செலுத்துதல், கோயில் தொடர்பான சேவைகள் உள்ளிட்டவற்றை பெறலாம். SHARE IT.
News March 27, 2026
இன்று வெளியாகும் அதிமுக முழு வேட்பாளர் பட்டியல்

அதிமுகவின் முழுமையான வேட்பாளர் பட்டியலை இபிஎஸ் இன்று வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 65 தொகுதிகளை ஒதுக்கீடு செய்த நிலையில், மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. இதில், முக்கிய தலைவர்கள் போட்டியிடும் <<19470729>>23 தொகுதிகளுக்கு<<>> வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், மீதமுள்ள 146 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.<<-se>>#TNElection2026<<>>


