News June 15, 2024
தங்கம் விலை சவரனுக்கு ₹440 உயர்வு

கடந்த சில நாள்களாக தொடர்ந்து குறைந்த வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹440 உயர்ந்து, ₹53,640க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹55 அதிகரித்து ₹6,705க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து, ₹95.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News March 27, 2026
அதிமுக கூட்டணியில் தொடருமா புரட்சி பாரதம்?

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடருமா என்பது குறித்து இன்று தெரியவரும். 4 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று என்று கூறிய அவர், கட்சியில் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
News March 27, 2026
ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள் ஒத்திவைப்பு

ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் கோரிக்கையின் பேரில், இந்த காலக்கெடு ஏப்ரல் 6 இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஈரானுடனான பேச்சுவார்த்தை சாதகமாக சென்று கொண்டிருப்பதாகவும், போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், டிரம்பின் இந்த முடிவு நிம்மதியை தந்துள்ளது.
News March 27, 2026
கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகளை ஒதுக்கிய திமுக

தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது. மொத்தமாக 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி விபரம்: காங்கிரஸ்(28), தேமுதிக(10), விசிக(08), சிபிஐ(5), சிபிஎம்(5), மதிமுக(4), ஐயூஎம்எல்(2), மமக(2), கொமதேக(2), எஸ்டிபிஐ(1), முக்குலத்தோர் புலிப்படை(1), மஜக(1) தமிழர் தேசம்(1)


