News September 13, 2024
தங்கம் விலை சவரனுக்கு ₹960 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு இன்று ₹960 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ₹6,705க்கும், 1 சவரன் தங்கம் ₹ 53,640க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ₹960 உயர்ந்து ₹54,600க்கு விற்பனையாகிறது. அதேபோல், 1 கிராம் தங்கம் விலையும் ₹120 அதிகரித்து இன்று ₹6,825க்கு விற்கப்படுகிறது. SHARE IT
Similar News
News September 18, 2025
BREAKING: நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர்(46) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னையில், நேற்று ஷூட்டிங்கின்போது மயங்கி விழுந்த அவர் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. இவர், விஸ்வாசம், மாரி, வேலைக்காரன், புலி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். #RIP
News September 18, 2025
குழந்தைகள் இந்த வகை Slipper-களை அணியக்கூடாதா?

குழந்தைகள் விரும்பி அணியும் கிராக்ஸ் வகை காலணிகளை தொடர்ந்து அணிவதால் முதுகுதண்டு பிரச்னை, மூட்டுகளில் அழுத்தம், நடையில் பிரச்னை ஏற்படும் அபாயம் இருப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த கிராக்ஸ்-கள் Croslite என்ற இலகுவான பொருளால் உருவாக்கப்படுகிறது. இதில் சரியான கிரிப் கிடைக்காததால், இதுபோன்ற பிரச்னைகள் வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அனைவருக்கும் இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News September 18, 2025
இபிஎஸ் உடன் எந்த பகையும் இல்லை: டிடிவி

இபிஎஸ் உடன் எவ்வித தனிப்பட்ட பகையும் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித்ஷா, அண்ணாமலை கூறியதால்தான் NDA கூட்டணியில் இணைந்ததாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை இபிஎஸ் எடுப்பார் என நயினார் கூறியதாலேயே அங்கிருந்து வெளியேறியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். CM வேட்பாளராக இபிஎஸ்-ஐ ஒருபோதும் அமமுக ஏற்காது என திட்டவட்டமாக தெரிவித்தார்.