News April 22, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹2,200 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.22) ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,290-க்கும் ஒரு சவரன் ₹74,320-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.
Similar News
News December 6, 2025
திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றியது திமுக: BJP

தமிழகத்தில் இந்து தர்மம் மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகியுள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றியது திமுகதான் என்றும், தீபம் ஏற்ற அனுமதி கொடுத்திருந்தால் அமைதியாக முடிந்திருக்கும் எனவும் கூறியுள்ளார். தமிழகம் ஆன்மிக பூமி என்பதை நிரூபிப்போம் என கூறிய அவர், 2026-ல் திமுகவிற்கு மக்கள் பதில் சொல்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News December 6, 2025
அதிரடியாக உயர்ந்த கட்டணம்.. கடிவாளம் போட்ட அரசு

நாடு முழுவதும் பல மடங்கு உயர்ந்துள்ள <<18488484>>விமான டிக்கெட் கட்டணத்திற்கு<<>> மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி, 500 கி.மீ., வரையிலான தொலைவுக்கு அதிகபட்சமாக ₹7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 500 – 1000 கி.மீ.,க்கு ₹12,000, 1000 – 1,500 கி.மீ.,க்கு ₹15,000 மற்றும் 1,500 கி.மீ.,க்கு மேல் ₹18,000 என வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது பிசினஸ் கிளாஸ், RCS – UDAN விமானங்களுக்கு பொருந்தாது.
News December 6, 2025
பண மழை கொட்டும் 5 ராசிகள்

சக்தி வாய்ந்த சமசப்தக ராஜயோகம் நேற்று உருவாகியுள்ளதால், 5 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *மிதுனம்: தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம். *சிம்மம்: நிதி விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். *துலாம்: உங்கள் பணம் யாரிடமாவது சிக்கி இருந்தால், அந்த பிரச்னை நீங்கும். *தனுசு: நகை, நிலம், சொத்துகளில் முதலீடு செய்து பயன் பெறுவீர். *கும்பம்: கடனை அடைக்க வாய்ப்புகள் கிடைக்கும்.


