News March 23, 2025
தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு.. காரணம் என்ன?

<<15844776>>தங்கம்<<>> விலை கடந்த 2 நாள்களாகக் குறைந்த நிலையில், வரும் நாள்களில் மேலும் குறையும் எனப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறியுள்ளார். கடந்த வாரத்தில் 3,050 டாலர்களாக இருந்த 1 அவுன்ஸ் தங்கம் 3,023 டாலராக குறைந்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வருவதால் இது மேலும் குறையுமாம். அதோடு, பங்குச்சந்தையும் ஏற்றம் காணுவதால் முதலீட்டாளர்களின் கவனம் அந்தப் பக்கம் திரும்பியுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News March 25, 2025
மியாமி ஓபன்: ஜோகோவிச் வெற்றி

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ஜோகோவிச் (செர்பியா), அர்ஜெண்டினாவின் கமிலோ யூகோ காரபெல்லி உடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான விளையாடிய ஜோகோவிச் 6-1, 7-6 (6-1) என்ற செட் கணக்கில் கமிலோ யூகோ காரபெல்லியை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
News March 25, 2025
உங்களின் ‘ஐந்து பேர்’ யார்?

நீங்கள் எந்த ஐந்து பேருடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த ஐந்து பேரின் சராசரியாகத்தான் நீங்கள் விளங்குவீர்கள் என்ற ஒரு வாக்கியம் உண்டு. நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் நம் எண்ணத்தை தீர்மானிக்கிறார்கள். உத்வேகம் தரும் நபர்களை கண்டறியுங்கள். வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் மனிதர்களுடன் நீங்கள் இருந்தால் உங்கள் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அப்படியானவர் உங்களுக்கு இருக்கிறாரா?
News March 25, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!