News March 29, 2024

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

image

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ஒன்று ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கு விற்பனையாகிறது. இதே போல, வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Similar News

News November 27, 2025

கடலூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

image

தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (நவ.27) மங்களூர், மலையனூர், அடரி உட்பட 94 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற உள்ளதாக, திமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வெ. கணேசன் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

ராசி பலன்கள் (27.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 27, 2025

விஜய்யை மீண்டும் சீண்டிய சீமான்

image

திருச்சியில் பிப்ரவரி 7-ம் தேதி நடைபெற உள்ள நாதகவின் மாநாட்டுக்கு உங்கள் பரம்பரையை அழைத்து வர வேண்டும் என தொண்டர்களுக்கு சீமான் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நடிகனுக்கு தான் கூட்டம் கூடுமா, தற்குறி பயதான் கூடுவானா, தத்துவகாரனுக்கும் கூட்டம் கூடும் என விஜய்யை மறைமுகமாக சாடினார்.234 தொகுதிகளிலும் போட்டியிடும் நாதக தமிழகத்தில் பெரிய கட்சி என்றும் சீமான் கூறியுள்ளார்.

error: Content is protected !!