News April 22, 2025
தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்!

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் <<16177046>>இன்று (ஏப்.22)<<>> ஒரே நாளில் சவரனுக்கு ₹2,200 உயர்ந்துள்ளது. கடந்த 1-ம் தேதி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,510-க்கும், சவரன் ₹68,080-க்கும் விற்பனையானது. பின்னர் முதல் வாரத்தில் சற்று இறக்கத்தைக் கண்டு அதன் பின்னர் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதனால், இந்த மாதத்தில் மட்டும் (22 நாள்களில்) சவரனுக்கு ₹6,240 உயர்வைக் கண்டுள்ளது.
Similar News
News November 24, 2025
வர்ணிக்க முடியாத கவிதை கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் என்றாலே, அவரது கியூட்டான முகபாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. வர்ணிக்க முடியாத கவிதை போல் அவரது முகபாவனைகள் நம்மை ரசிக்க வைக்கின்றன. அவர் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் பட புரமோஷனுக்காக நடத்திய போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அனைத்துமே அவரது ஸ்டைலில் ரசிக்கும்படி உள்ளது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News November 24, 2025
BREAKING: புதிய கட்சி.. OPS அறிவித்தார்

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, அதிமுக தொண்டர்கள் உரிமைக் கழகமாக மாறியுள்ளதாக OPS அறிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக கொடுத்த ஆதரவு, தியாக உணர்வு செயல்பாடுகளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, இன்னும் ஒரு மாதத்தில் அதிமுக இணையாவிடில் தனிக்கட்சியாக உருவெடுப்போம் என OPS ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
சென்னையில் எவ்வளவு மக்கள்தொகை தெரியுமா?

உலகளவில் நகர்ப்புற மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள பல நகரங்கள் வேகமாக விரிவடைந்து வருகின்றன. அதன்படி, 2024-2025-ம் ஆண்டில் அதிக மக்கள் தொகை கொண்ட டாப் 10 நகரங்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE


